பேருந்தை இயக்கிய ஓட்டுனர் - தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம்

திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-01-09 15:07 GMT

வாக்குவாதம் 

போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை இதுவரை தமிழக அரசால் தொடங்கப்படவில்லை எனவும் , 2015 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கான அகவிலை படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை , இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதில்லை ,  பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவது அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் சிஐடியு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக சிஐடியு , அண்ணா தொழிற்சங்கம் ஆகியவை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பேருந்து நிலையத்திற்குள் சென்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் பணி முடிந்து செல்லும் ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கக் கூடாது என பணியில் ஈடுபட்ட ஓட்டுனர் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை  சமரசம் செய்து  பேருந்து நிலையத்திற்கு வெளியேஅழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News