நெல்லையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் பகுதிகளுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
ஊதிய உயர்வு ,அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கத்தினர் நேற்று 9- ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவித்திருந்த நிலையில் அரசு தரப்பில் இதுதொடர்பாக அனைத்துப் பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது . நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து பேருந்துகளும் இன்று 2- வது நாளாகவும் அதிகாலை முதல் வழக்கம்போல் இயங்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து நெல்லை மண்டலத்தில் நெல்லை மாவட்டத்தில் 7 பணி மனைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பணிமனைகளும் தென்காசியல் 4 பணி மனைகளும் அடங்கும் இங்கு 898 பேருந்துகள் உள்ளன. அனைத்து பேருந்துகளும் பணிமணைகளில் இருந்து வெளியேறி அதிகாலை முதலே நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தென்காசி , தூத்துக்குடி, திருச்செந்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன. நெல்லை மாநகர் பகுதியிலும் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணி மனை, தாமிரபரணி பணி மனையில் உள்ள 122 பேருந்துகளும் இயங்கி வருகின்றன. கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து அவர்கள் அனைத்து பேருந்துகளையும் நேர அட்டவணைப்படி இயக்கும் பணியை கண்காணித்து வருகின்றனர். மேலும் அனைத்து பணி முன்பும் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்புக்காக போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை.