கிளாம்பாக்கத்தில் இருந்து சர்வீஸ் சாலையில் செல்லும் பேருந்துகள்... பொதுமக்கள் போராட்டம்

Update: 2024-01-03 10:05 GMT
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகிறது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. இதனால் சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை எனவும் சிரமம் ஏற்படுவதாகவும் பொதுக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News