மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தொழில் கடன் - மாதர் சங்கத்தினர் கோரிக்கை
பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தொழில் கடன் கொடுக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர் .;
Update: 2024-06-12 06:53 GMT
மனு அளிக்க வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடன் சுமையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தொழில் கடன் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் அம்பிகா தலைமையில் மாவட்ட பொருளாளர் மலர்க்கொடி மாவட்ட துணைச் செயலாளர் பாக்கியம் மாவட்ட துணை தலைவர் சிவசங்கரி மாவட்ட குழு தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.