இறைச்சி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை
இறைச்சி கடை வைத்துள்ள நபர் அதிக குடிபழக்கம் உள்ள நிலையில் மகன் கண்டித்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-21 05:53 GMT
இறைச்சி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி வண்ணாக்குடி தெருவை சேர்ந்தவர் மாரிதாஸ். இறைச்சி கடை நடத்தி வந்த மாரிதாஸ்க்கு குடி பழக்கம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால் அவரது மகன் கண்டித்துள்ளார். இதில் விரக்தி அடைந்த மாரிதாஸ் இன்று கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.