சிறுமி ஸ்கேட்டிங் மூலம் : 30கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனை !

சங்கரன்கோவிலில் சிறுமி ஸ்கேட்டிங் மூலம் : 30கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

Update: 2024-04-27 06:32 GMT

ஸ்கேட்டிங்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள A. கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மிகா என்ற ஐந்து வயது சிறுமி சங்கரன்கோவில் கோவில் வாசலில் இருந்து ஸ்கேட்டிங் மூலம் தொடர்ச்சியாக தேவர் குளம் வரை சென்று முப்பது கிலோ மீட்டர் தூரத்தை கடந்து யுனிவர்சல் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் இடம் பிடிப்பதற்கான புதிய சாதனையை படைத்துள்ளார்.

மேலும் இந்த ஸ்கேட்டிங் உலக சாதனை போட்டியை அதிமுக பிரமுகர் ஐயாத்துரை பாண்டியன் மற்றும் சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதிர் உள்ளிட்டோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

ஸ்கேட்டிங்கில் செல்லும் மாணவிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் வாகனங்களை சிறிது நேரம் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் எந்த ஒரு அசம்பா விதம் ஏற்படாமல் இருப்பதற்காக தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் உடன் சென்றது, மேலும் இதே போன்று கடந்த மாதம் தலவங்கோட்டை பகுதியைச் சார்ந்த முவித்ரா என்ற ஏழு வயது மாணவி 30 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News