நவக்கிரக முட்டைகோஸை வியந்து பார்த்த மக்கள்
பெங்களூருவிலிருந்து வந்த ஒரு முட்டைகோஸ் மூடையை பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு முட்டைகோஸ் நவக்கிரகம் போல 9 தலைகளோடு இருந்தது.
Update: 2024-02-07 09:39 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் நவக்கிரக முட்டைகோஸை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். வத்தலகுண்டு மதுரை சாலையில் உசிலம்பட்டி பிரிவு அருகே காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை வியாபார கடை வைத்திருப்பவர் செந்தில்குமார்.
இன்று காலை பெங்களூருவிலிருந்து வந்த ஒரு முட்டைகோஸ் மூடையை பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு முட்டைகோஸ் நவக்கிரகம் போல 9 தலைகளோடு இருந்தது. தனது 25 வருட காய்கறி வியாபாரத்தில் இப்படி ஒரு முட்டைக்கோஸை பார்த்திராத செந்தில்குமார் அதை தனது கடையில் வைத்திருந்தார்.
கடைக்கு வியாபாரம் வாங்க வந்த பொதுமக்கள் நவக்கிரக முட்டைகோஸை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.