மேச்சேரியில் மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி பலி

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரியில் மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி பலியானது.

Update: 2024-05-24 06:18 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரியில் மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி பலியானது.

மேட்டூர் அருகே மேச்சேரி வெள்ளார் ஊராட்சியில் உள்ளது அரசமரத்தூர். டேனிஷ் பேட்டை வனச்சரகம் ராமசாமிமலை காப்புக் காட்டை ஒட்டி உள்ளது.  இங்கு விவசாயிகள் கால்நடை வளர்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி பெருமாள் என்பவர் 8 பசு மாடுகளையும் 8 கன்றுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல மாடுகளையும் கன்றுகளையும் வீட்டின் எதிரே  கட்டி வைத்துவிட்டு உறங்கச் சென்றார். காலையில் வந்து பார்த்த பொழுது பசுங் கன்று ஒன்றை மர்ம விலங்கு அடித்து சுமர் 200 மீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளது. 

இதில் கன்று குட்டி இறந்து போனது நகக்கீரல்களும் கடித்த ரத்தம் உறிஞ்சிய பல் தடயங்களும் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த டேனிஸ்பேட்டை வனச்சரகர் தங்கராசு மேச்சேரி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னர்.  ஏற்கனவே சுற்று வட்டார பகுதிகளில மாடுகளை  மர்மம்விலங்கு தாக்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரு விவசாயி மாட்டை மர்ம விலங்கு தாக்கி உள்ளது.

கால் தடப்பதிவுகள் நகை தீரல்கள் பல் பதிவு ஆகியவற்றை பார்த்த பொழுது சிறுத்தை போன்ற வனவிலங்கு அடித்து கொன்று இருக்கலாம் என்று வனத்துறையினரும் கால்நடை மருத்துவரும் தெரிவித்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகள் விட வேண்டும் என  வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News