பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் காரிப்பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 03:02 GMT

பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தர்மபுரி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் அவர்கள் கடன் தரும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் கடன் பெரும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்யும் பொழுது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் காப்பீடு செய்யும் பொழுது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் புல எண்கள், பரப்பு, மற்றும் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் சரிபார்த்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News