அரசுகல்லுாரியில் வெளியாட்கள் வருவதை கண்காணிக்க கேமரா அமைப்பு

திருத்தணி அரசுகல்லுாரியில் வெளியாட்கள் வருவதை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-22 15:08 GMT

திருத்தணி அரசுகல்லுாரியில் வெளியாட்கள் வருவதை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டுள்ளது.


திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், 3000 மாணவ - -மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்கள் ஒழுக்கம், கற்றல் திறன், தனித்திறன் ஆகியவற்றை வளர்க்கும் பல்வேறு செயல் திட்டங்களைக் கல்லுாரி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளாக மாணவர்கள் இடையே அடிக்கடி சமூக பிரச்னை மற்றும் முன்விரோதம் காரணமாக அடிதடி, வகுப்புகள் புறக்கணிப்பு மற்றும் போராட்டம் நடந்து வந்தது. மேலும் மாணவர்களுக்கு ஆதரவாக, வெளிநபர்கள் மாணவர்கள் போல் கல்லுாரிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசு கல்லுாரியில் மாணவர்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக இருந்தது. இதையடுத்து கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுத்தார்.

மாணவர்கள் மோதல்களை தடுக்கவும், மாணவர்கள் போல் வெளிநபர்கள் வருவதை கண்காணிக்கவும், கல்லுாரி கட்டடங்கள் மற்றும் நுழைவு வாயில் ஆகிய இடங்களில், 50 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகிறார் இதுதவிர கடந்தாண்டு முதல் கல்லுாரி மாணவ- மாணவியருக்கு சீருடைகள் அறிவித்து, அடையாள அட்டையுடன் வரும் மாணவர்கள் மட்டுமே கல்லுாரி வளாகத்திற்குள் அனுமதித்தார். மேலும் கல்லுாரி நுழைவு கேட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அரசு கல்லுாரி நுழைவு வாயிலில் நிர்வாகம் சார்பில் பாதுகாவலர் நியமிக்கப்பட்டு மாணவர்கள் கண்காணித்து உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஐ.டி.கார்டுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்திற்குள் உரிய அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் வரக்கூடாது. மீறி வருபவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News