அரசு பள்ளியில் கேமரா திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.சி.டி.வி., கேமராக்ககளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-01 05:04 GMT
கள்ளகுறிச்சி காவல் நிலையம்
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. கடந்த 27ம் தேதி மாலை வழக்கம் போல் பள்ளியை முடிவிட்டு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பள்ளியில் இருந்த 5 சி.சி.டி.வி., கேமராக்கள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் (பொ) அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, கேமராக்களை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.