முன்னூர் ஊராட்சியில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

முன்னூர் ஊராட்சியில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-12-20 17:57 GMT

முன்னூர் ஊராட்சியில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

முன்னூர் ஊராட்சியில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் நவம்பர் 25ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முன்னூர் ஊராட்சி அலுவலக வாயிலில், இன்று பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. உரக்கச் சொல், பொறுக்க மாட்டோம், குரல் எழுப்புவோம். என்ற ஸ்லோகங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சார நிகழ்வில், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் அலமேலு, கணக்காளர் மலர், மண்டல தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News