திருப்பூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரச்சார இயக்கம்!
திருப்பூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போதைக்கு எதிரான கோரிக்கைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், போதைக்கு எதிராகன கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அம்மாபாளையம் கிளை சார்பில் அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், நியாய விலை கடை அருகில், குமரன் காலனி, பாரதி நகர் கோபால் டி மில், உள்ளிட்ட இடங்களில் பிரச்சார இயக்கத்தை நேற்று மேற்கொண்டனர். இந்த இயக்கத்தை வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் நாகராஜ் தலைமை ஏற்று நடத்தினார். இந்த பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சரவண தமிழன் பேசினார் .
நீட் முறைகேடு என்பது குஜராத்தில் இருந்து தான் துவங்குகிறது. இந்தத் தேர்வு முறைகேட்டில் குஜராத் ஆசிரியர் கைது செய்யப்பட்டார், அதேபோல பீகாரில் எம்டி செக் கொடுத்தால் விடைத்தாள் எளிதில் கிடைத்து விடும் இப்படி தேர்வு எழுதி பட்டம் பெறுபவர்கள் எப்படி மருத்துவராக இருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், இந்திய நாட்டினுடைய பிரதமர் என்ன பட்டம் படிப்பு படித்தார் என்பது இதுவரை தெரியவில்லை எங்கு கல்வி கற்றார் என்பதும் கூட தெரியவில்லை ஆனால், கல்விக் குழுவிற்கு தலைவராக இவர் தான் இருந்து வருகிறார், தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளனர்.
அம்பானி துறைமுகத்திலிருந்து தான், போதைப் பொருள் இந்தியாவிற்கு வருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை போதைக்கு, அடிமையாகி வருகின்றனர் எளிதில் பத்து ரூபாய்க்கு போதை சாக்லேட், 30 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வடிவில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் அரசாங்கம் கவனத்தில் கொண்டு முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். நிகழ்வில் வாலிபர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.