அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு புற்றுநோய் சிகிச்சை

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் இது வரை மொத்தம் 6 பேருக்கு நாக்கு மற்றும் வாய் புற்றுநோய் சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டு நோயாளிகள் நல்ல முறையில் குணமாகி வீட்டுக்கு திரும்பியதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Update: 2024-02-18 08:02 GMT

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 

மதுரை மாவட்டம் பேரையூரில் இருந்து வாய்பகுதியின் இடது பக்கம் ஒரு மாத காலமாக சதை வளர்ச்சி உள்ளதாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 72 வயது முதியவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அதில் சதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு அனைத்துத்துறை மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள நிணநீர் கட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றிய பகுதிக்கு கையிலிருந்து சதை எடுக்கப்பட்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலமாக 15.02.2024 அன்று காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி தற்போது நலமுடன் உள்ளார்.

இந்த அறுவைச்சிகிச்சை பேராசிரியர் மரு.கீதா ஆலோசனைபடி, இணை பேராசிரியர் மரு.திருமலைக்கண்ணன் அவர்களின் தலைமையில், இணை பேராசிரியர் மரு. கோகுல்நாத் பிரேம்சந்த், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர் மரு.அருண்குமார், உதவி பேராசிரியர்கள் மரு.சங்கர், மரு.ராதிக், மரு.சுகன்யா, மயக்க மருந்து இணை பேராசிரியர் மரு.சகுந்தலா ஆலோசனைப்படி, உதவி மயக்க மருந்து பேராசிரியர் மரு. ரமணன், மரு.பவுன்பாண்டியன், மரு.தனலட்சுமி, பட்ட மேற்படிப்பு மருத்துவர் வைஷ்ணவி, உறைவிட பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் நாகஜோதி, முனிஷ்வரன், கலைச்செல்வி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொண்ட குழுவுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட ரூ.5 இலட்சம் முதல் 7 இலட்சம் வரை செலவாகும். இது நமது மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. மேலும், நமது விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் இது வரை மொத்தம் 6 நாக்கு மற்றும் வாய் பகுதி புற்றுநோய் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகள் நல்ல முறையில் குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர். எனவே இம்மாதிரியான நோய்களுக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News