காரோடு பணம் கொள்ளை - 2 பேர் கைது, டிரைவருக்கு வலை
புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தின் பணத்தை காரோடு கொள்ளையடித்து சென்ற வழக்கில் 2 பேர் கைது செயப்பட்டு, காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரூ.75 லட்சம் மீட்க்கப்பட்டது, தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் இயங்கி வரும் பிரபல காண்ட்ராக்ட் நிறுவனத்தில் பணியாற்று வரும் மேற்பார்வையாளர் சதீஷ்குமார் உதவியாளர் கார்த்திக் ஆகியோர் நெடுஞ்சாலைப் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூபாய் 82 லட்சத்தை சாக்கு முட்டையில் வைத்து காரில் எடுத்துச் சென்றனர். காரை நிறுவனத்தின் கார் டிரைவர் 25 வயது ராமன் என்பவர் ஓட்டி சென்றார் டீசல் நிரப்புவதற்காக காரை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள பெட்ரோல் பங்கில் ராமன் நிறுத்தி உள்ளார். இதனால் சதீஷ் ,கார்த்திக் இருவரும் காரில் இருந்து இறங்கி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் சென்று உள்ளனர் அப்பொழுது காரை எடுத்துக்கொண்டு ராமன் வேகமாக சென்றார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் நிறுவனத்திற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் இதற்கிடையே செம்மாட்டு காட்டுப்பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்ததில் புத்தம்புரை சேர்ந்த செல்வமணி (வயது 20) பூங்குடியை சேர்ந்த சண்முகம் (வயது 24) என்பதும் பணம் கொள்ளை சம்பவத்தில் உடந்தையாக இருந்தும் தெரிய வந்தது. இதனை அடுத்து திருக்கோகர்ணம் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்ததில் தனியார் காண்டாக்ட் நிறுவன டிரைவர் ராமன் தங்களை தொடர்பு கொண்டு ஒரு சாக்குமூட்டை தருவதாகவும் அதனை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்குமாறு கூறினார் அதன்படி ராமன் கொடுத்த சாக்கு முட்டையை பள்ளம் தோன்றி மறைத்து வைத்ததாக தெரிவித்தனர் இதன் எடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு முட்டையை பறிமுதல் செய்து பிரித்துப் பார்த்தனர் அதில் 75 லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் தலைமறைவான கார் டிரைவர் ராமனை தேடி வருகின்றனர்.