இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

மாயனூர் காவல் நிலையம் அருகே டூவீலர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-24 13:45 GMT

விபத்து 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மணவாசி, முடக்கு சாலை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் தினகரன் வயது 24. அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மகன் நிதிஷ் வயது 13. இவர்கள் இருவரும் டூவீலரில் ஜூன் 19ஆம் தேதி மாலை 6:50 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம் மாயனூர் காவல் நிலையம் அருகே சென்றபோது, எதிர் திசையில் கோவை மாவட்டம், வடவள்ளி, புதிய கோல்டன் நகரை சேர்ந்த சுரேஷ் மோகன்குமார் என்பவர் ஓட்டி வந்த கார், தினகரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில், தினகரன் மற்றும் நிதிசுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக இருவரையும் மீட்டு, தனியர் ஆம்புலன்சில் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தினகரன் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மோகன்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News