பனை மரத்தில் கார் மோதி 5 பேர் காயம் !
சிவகங்கை அருகே பனை மரத்தில் கார் மோதி 5 பேர் காயம் - போலீசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 05:16 GMT
மருத்துவமனை
சிவகங்கை அருகே முடிகண்டத்தைச் சேர்ந்த உறவினர்கள் சிலர் மானாமதுரை அருகே அரிமண்டபத்தில் சாமி கும்பிட்டு விட்டு காரில் ஊருக்கு திரும்பினர். காரை ஓட்டுநர் பாலமுரளி ஓட்டினார். சிவகங்கை முத்துப்பட்டி அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோர பனை மரத்தில் மோதியது. இதில் நாராயணன் (70), புஷ்பம் (65), நிஷாந்த் (10), தாமோதரன் (60), அமிர்தம் (50) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பனை மரமும் வேரோடு சாய்ந்தது கிராம மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து சிவகங்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.