200 அடி பள்ளத்தில் விழுந்த கார் - ஒருவர் உயிரிழப்பு
போடிநாயக்கனூர் மலைச்சாலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு நான்காவது கொண்டை ஊசி வளைவில் சுமார் 200 அடி பள்ளத்தில் கார் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போடி மெட்டு மலைச்சாலை சுமார் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள இந்த மலைச்சாலையில் நாள்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்றுலா செல்வதற்காக தமிழகம் மற்றும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தற்போது விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் வண்டி இன்னும் 12 முப்பது மணி அளவில் கர்நாடகா பிதர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்ற டாக்டர் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் கேரளா சுற்றுலா சென்று விட்டு காரில் திரும்பி வந்துள்ளார் போடிமெட்டில் இருந்து போடிநாயக்கனூர் வரும் வழியில் நான்காவது கொண்டை ஊசி வலைவருகே வளைவில் திரும்பிய கார் நிலைத்தடுமாறி 200 அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்ததில் வாகனத்தை ஒட்டி வந்த சஞ்சீவிரட்டி என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
குரங்கணி காவல்துறையினர் மற்றும் தேனி போடிநாயக்கனூர் தீயணைப்பு பேரிடர் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள நபர்கள் உதவியுடன் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு படுகாயம் அடைந்த சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஐந்து நபர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காருக்குள் சிக்கி உயிரிழந்த சஞ்சீவி ரெட்டி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குரங்கணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து நடைபெற்றது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.