விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார் - 3 பேர் படுகாயம்
சிங்கபெருமாள்கோவில் அருகே பேருந்து காரின் மீது மோதிய விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார். இதில் 3 பேர் காயமடைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 10:04 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சிங்கபெருமாள்கோவில் அருகே பேருந்து முன் சென்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கி தடுப்பு சுவர் மீது ஏரி நின்றது காரில் பயணம் செய்து வந்த கணவன், மனைவி, ஒரு குழந்தை என மூன்று பேரும் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் வர வைத்து முதலுதவிக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30-நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.