திருச்செங்கோடு அறிவுசார் மையத்தில் தொழில் நெறிகாட்டும் வழிமுறை பயிற்சி வகுப்பு

திருச்செங்கோட்டில் நடைபெற்ற தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.;

Update: 2024-02-09 14:38 GMT

பயிற்சி வகுப்பு 

திருச்செங்கோடு நகராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் அறிவு சார் மையத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி உமா அவர்களின் உத்தரவுபடி தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பிரபாகரன் சிறப்பு தனி துணை ஆட்சியர் நாமக்கல், வசந்தன் போட்டித் தேர்வு பயிற்சியாளர்,நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு போட்டி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என பயிற்சி அளிக்கப்பட்டது திருச்செங்கோடு நகராட்சி துப்புரவுறவு அலுவலர் வெங்கடாஜலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Similar News