மது பாட்டில்கள் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

திருக்கோவிலூரில் மது பாட்டில்கள் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து உண்டானது.

Update: 2024-05-10 14:23 GMT

திருக்கோவிலூரில் மது பாட்டில்கள் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து உண்டானது. 

திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ஜெயராமன் அரசு மதுபானங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மன்னார்குடி இருந்து திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்றாா். திருக்கோவிலூர் சந்தப்பேட்டை புறவழிச் சாலை அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி நிலைதடுமாறி சாலை அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த பெரும்பாலான மதுப்புட்டிகள் உடைந்து சேதமடைந்தன. மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்ததால் விபத்துக்குள்ளான லாரியை மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி என்று தெரியவில்லை.

இதனால் லாரியில் இருந்த மது பாட்டில்கள் மது பிரியர்களிடம் இருந்து தப்பியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தலை மேல் கொண்ட போலீசாரால் விபத்துக்குள்ளான லாரியில் இருந்த மது பாட்டில்கள் மாற்று லாரியில் ஏற்றி திருவண்ணாமலைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News