குமாரபாளையம் அருகே காரீப் பருவ பயிற்சி முகாம்
குமாரபாளையம் அருகே வேளாண்மைத்துறை மூலம் கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி முகாம் சமயசங்கிலியில் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வேளாண்மைத்துறை மூலம் கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக்குழு உறுப்பினர்களுக்கு காரீப் பருவ பயிற்சி முகாம் குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் நடந்தது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறையின் மானிய திட்டங்கள், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும் விளக்கி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி பங்கேற்று,
நுண்ணீர் பாசனம், பயிர் காப்பீடு, காரீப் பருவ பயிர்களின் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் நிஷா பங்கேற்று, உழவன் செயலியின் பயன்கள், மற்றும் பிரதம மந்திரி கவுரவ நிதி பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். வட்டார தொல்நுட்ப மேலாளர் கிருபா பங்கேற்று அட்மா திட்டம் குறித்து விளக்கி கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதில் சமயசங்கிலி, செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், சானார்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், பூலக்காடு உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.