குமரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 162 பேர் மீது வழக்கு !

குமரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 162 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-07-08 05:03 GMT

 வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் வாகன பறிமுதல் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மாவட்ட முழுவதும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிமல சென்றவர்கள், மூன்று பேர் பயணம் செய்தவர்கள், காரில் சீட்டு பெல்ட் அணியாக இருத்தல் மற்றும் மதுபோதையில் வாகன ஓட்டுவார்கள் என மொத்தம் 162 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், வடசேரி சந்திப்பு, ஒழுகினசேரி சந்திப்பு உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் சார்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டியதாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் வாகனங்களை வேகமாக ஓட்டியதாகவும் ஓட்டுனர் உரிம இல்லாமலும் விதிமுறைக்கு மாறாக வாகனப் பலகை எழுதி வைத்திருந்ததாகவும் மொத்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டன. இது தவிர மது போதையில் வாகன ஓட்டியதாக மாவட்டத்தில் நேற்று மட்டும் 41 வழக்குகள் பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News