மாவு மில் உரிமையாளரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு !

நாகர்கோவிலில் மாவு மில் உரிமையாளரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-15 04:46 GMT
கிரைம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் அங்கு மாவு மில் வைத்துள்ளார்.  இவர் நேற்று மாலை நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது  மகளை அழைத்து வர பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்கு மற்றொரு பைக்கில் வந்த மூன்று பேர் கண்ணனை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்தவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்ணன் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.  புகாரில், -  அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கண்ணனுக்கும் முன் குரோதம் இருந்து வந்ததாகவும், நேற்று மாலை மகளை  அழைத்துச் செல்ல வந்த போது, ஆனந்த் உட்பட 3 பேர் சேர்ந்து தன்னை கையால் தாக்கி, கண்ணனிடம் இருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூபாய் 20 ஆயிரம்  ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர் என்றும், மேலும் இது தொடர்பாக போலீசில்  புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News