கோயில் செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு

கோயில் செயல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

Update: 2024-01-24 14:26 GMT

பைல் படம்


ராமர் கோவில் பட்டாபிஷேகம் நேற்று முன் தினம் நடந்தது. அன்று நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஹோமம், பஜனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமர் கோவிலில் பா.ஜனதாவினர் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சியை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்தனர்.

அப்போது அங்கு வந்த கோவில் செயல் அலுவலர் சங்கர் எந்த வித அனுமதியும் பெறாமல் கோவிலுக்குள் டி.வி.யை வைத்துள்ளீர்கள், இது கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே டி.வி.யை கோவிலுக்கு வெளியே கொண்டு செல்லுங்கள் என்றார். இதையடுத்து பா.ஜ.க.வினர் எங்களை வெளியே போக செல்ல நீங்கள் யார்? என்று கூறியபடி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கர் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் குமார் உள்பட10 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News