தனியார் பள்ளி உரிமையாளரை திட்டிய 2 பேர் மீது வழக்கு
கள்ளகுறிச்சி அருகே ஆலத்தூர் பகுதியில் தனியார் பள்ளி உரிமையாளரை திட்டிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.;
Update: 2024-05-11 08:06 GMT
வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி உமா, 39; தனியார் பள்ளி உரிமையாளர். இவரது பள்ளி உள்ள இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜூ மகன்கள் குமார், சக்திவேல் ஆகிய இருவருக்கும் இடம் உள்ளது. இவர்கள் இருவரும் இடத்தை அளவீடு செய்ய வருமாறு கண்ணனிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு, சர்வேயர் வைத்து முறைப்படி அளக்கலாம் என கண்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி குமார், சக்திவேல் ஆகிய இருவரும் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளியின் முன்பக்க கேட்டினை சேதப்படுத்தி, கண்ணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் குமார், சக்திவேல் ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.