தொழிலாளியை தாக்கியவர் மீது வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் பகுதியில் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என தொழிலாளியே தாக்கியவரே காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் இன்னசென்ட் ரீகன் (36) மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி மேரி டால்பின் மெல்பா. இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவிலான்விளை என்ற பகுதியில் வசித்து வந்தனர்.
அப்போது கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் சமயங்களில் பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஐயப்பன் (49) என்பவர் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைப்பாராம். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேரி டால்பின் கணவன் இன்னசென்ட் டை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதற்கு ஐயப்பன் தான் காரணம் என்று இன்னசென்ட் ரீகன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஐயப்பன் டீக்கடைக்கு சென்ற நேரம் அப்போது அங்கு வந்த இன்னசென்ட், கூர்மையான ஆயுதத்தால் ஐயப்பனை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ஐயப்பன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.