கீழே விழுந்த நகையை திருடி சென்ற வாலிபர்கள் மீது வழக்கு

குண்டலப்பட்டி அருகே கீழே விழுந்த தங்க நகையை திருடி சென்ற வாலிபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.;

Update: 2024-05-23 07:38 GMT

பைல் படம்

தர்மபுரி நகர பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி சோனியா,கணவன்,மனைவி இருவரும் குண்டலப்பட்டியில் நடந்த ஒரு திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அளே தர்மபுரி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது சோனியா அணிந்திருந்த தங்க நகையில் பொருத்தப்பட்டிருந்த 3 பவுன் டாலர் கழுத்தில் இருந்து கழன்று கீழே விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய சோனியா சாலை ஓரத்தில் விழுந்து கிடந்த டாலரை எடுக்க சென்றார்.

Advertisement

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தங்க டாலரை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். அவர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியா இதுபற்றி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தங்க டாலரை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News