சிறுமலை பிரிவு அருகே பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்போன் பறிப்பு
நத்தம் ரோடு சிறுமலை பிரிவு அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வீரபிரபாகரன் என்பவர் பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 10:17 GMT
கோப்பு படம்
நத்தம் ரோடு சிறுமலை பிரிவு அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வீரபிரபாகரன் (32) என்பவர் வேலை காரணமாக நண்பருடன் நடந்து சென்றபோது அங்கு வந்த உதயகுமார்(29), தாமோதரன்(23) ஆகிய இருவரும் வீரபிரபாகரன் பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இதுதொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு உதயகுமார், தாமோதரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.