டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை

பரமத்தி வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2024-05-27 14:14 GMT

பரமத்தி வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


பரமத்திவேலூர் தாலுகா, குப்புச்சிபாளையம் அருகே உள்ள பொய்யேரியில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக பரமத்திவேலூரைச் சேர்ந்த துரைசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் பணிகளை முடித்து விட்டு டாஸ்மார்க் கடையை பூட்டிவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக வந்தவர்கள்  டாஸ்மாக் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து  டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து பார்த்த துரைசாமி இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில்  புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார்  விரைந்து வந்து டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து மேற்பார்வையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்  கடைக்குள் வைத்திருந்த ரூ43 ஆயிரம் பணம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது .அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் பணம் மற்றும் மது பாடல்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News