ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல், பறக்கும்படை அதிரடி
பகண்டைகூட்ரோடு அருகே ரூ.96 ஆயிரம் பணம் பறிமுதல்.;
Update: 2024-04-01 04:39 GMT
பறக்கும்படை அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டைகூட்ரோடு அருகே உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 96 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர். ரிஷிவந்தியம் பி.டி.ஓ., நடராஜன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் அத்தியூர் வாரச்சந்தை பகுதியில் நேற்று மதியம் 12.15 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பகண்டைகூட்ரோட்டில் இருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற பதிவெண் இல்லாத ேஹாண்டா பைக்கில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் மகேந்திரன்,26; என்பதும், 96 ஆயிரத்து 100 ரூபாய் பணம் வைத்திருந்ததும், கள்ளக்குறிச்சியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படை குழுவினர் ரூ.96 ஆயிரத்து 100 பணத்தை பறிமுதல் செய்து, வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.