வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்!
திருமணத்திற்காக சென்ற வியாபாரியிடம் ரூபாய் 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-03-29 09:41 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காடு சோதனைச் சாவடியில் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வதை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 500 இருந்தது.விசாரணையில், காரில் வந்தவர் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த வியாபாரி ஜெகதீஷ்குமார் என்பதும், ராஜஸ்தானில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் மனைவி, மகளுடன் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பி செல்வதாகவும், அந்த பணம் வியாபாரம் மூலம் கிடைத்தது. திருமணத்துக்காக எடுத்து சென்ற பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்புக்குழுவினர் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள், உரிய ஆவணங்களை காண்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளும்படி ஜெகதீஷ்குமாரிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து நிலை கண்காணிப்பு குழுவினர் அவற்றை காட்பாடி தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.