பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-04 04:15 GMT

 தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக்கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூறமுடியும் என தமிழக பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய கோரி கேசவ விநாயகம் வழக்கு தொடர்ந்தார். சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News