கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை - பூவை ஜெகன் மூர்த்தி.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த 60 உயிர்களுக்கு தீர்வு கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அப்படி இல்லையென்றால் மாநில அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Update: 2024-06-27 06:13 GMT

பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ

சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அதிமுகவினர் கேட்டிருந்தனர். கிட்டத்தட்ட 60 உயிர்களை பலி கொடுத்த இந்த விவகாரம் தொடர்பாக பேச நேரம் கேட்டதற்கு அவை தலைவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்த காரணத்தால் அவை தலைவர் காவலர்களை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி விட்டார். மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பதை ஒடுக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.

அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் அவை தலைவர் ஒரு தலை பட்சமாக ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூட்டத்தொடரில் ஏற்கனவே நான் பேசும்பொழுது சொல்லி இருக்கிறேன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று. இவர்கள் அதை மழுப்புவதற்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு மத்திய அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இங்கு சமூக நீதிப் பேசும் திராவிட மாடல் அரசு என்கிற அவர்கள் ஏன் முன்னுதாரணமாக எடுத்து ஜாதி வாரி  கணக்கெடுப்பு எடுக்க தயங்குகிறார்கள் மறுக்கிறார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி.

மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் வெளியே அனுப்பி விடுகிறார்கள். புரட்சி பாரதம் சார்பில், நேற்று கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த 60 உயிர்களுக்கு என்ன தீர்வு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அப்படி இல்லையென்றால் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இன்று மட்டுமல்ல தொடர் முடியும் வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் இது நியாயம் அல்ல. ஒருதலைபட்சமாக செயல்படும் சபாநாயகர் தான் உள்ளார். இது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் எதிர் கட்சி ஒடுக்குவதாகவும் உள்ளது, மக்களை காக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று மீண்டும் பல கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளார்கள் என்றார்.

Tags:    

Similar News