ஏற்காடு வாழவந்தியில் சி.பி.எஸ்.இ. ரெசிடென்ஷியல் பள்ளி தொடக்க விழா

ஏற்காடு வாழவந்தியில் சி.பி.எஸ்.இ. ரெசிடென்ஷியல் பள்ளி தொடக்க விழாவை வருமான வரித்துறை ஆணையாளர் திறந்து வைத்தார்.

Update: 2024-06-18 04:45 GMT

ஏற்காடு வாழவந்தியில் சி.பி.எஸ்.இ. ரெசிடென்ஷியல் பள்ளி தொடக்க விழாவை வருமான வரித்துறை ஆணையாளர் திறந்து வைத்தார்.


சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தியில் சென்ட்ரல் லேர்னிங் கேம்பஸ், சி.பி.எஸ்.இ. ரெசிடென்ஷியல் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சென்ட்ரல் சட்டக்கல்லூரி மற்றும் சென்ட்ரல் லேர்னிங் கேம்பஸ், சி.பி.எஸ்.இ. ரெசிடென்ஷியல் பள்ளி தலைவர் சரவணன் தலைமை தாங்கி பேசும் போது, இந்த பள்ளியின் லோகோவில் பொறிக்கப்பட்டு இருக்கும் கலாசாரம், மனித நேயம், தர்மம், கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய பண்புகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டு இந்த பள்ளி தரமான கல்வி சேவை வழங்கும் என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் நந்தினி வரவேற்றார். விழாவில் சேலம் மண்டல வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு பள்ளியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசினார். விழாவில் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, முன்னாள் எம்.பி. தேவதாஸ், சேர்வராய்ஸ் குழுமத்தின் திட்ட வகுப்பாளர் கதிர் ராமசாமி, ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News