சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-09 02:21 GMT

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக முனைவர் P ஜெயப்பிரியா அவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் முனைவர் .S. மீனா பிரியதர்சினி அவர்கள் கருப்பொருள் முகவரியாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அம்மா 'முனைவர் K. கலா அவர்கள் சிறப்புறையாற்றி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அம்மா முனைவர் B. ஷிலா அவர்கள் தொடக்க விழா பேருரையாற்றினார்.

பெண்களின் வளர்ச்சியை பாடல்மூலம் தெரிவித்து அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார் . பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் அம்மா முனைவர் A. கிளாரா தேன்மொழி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த முனைவர் . B. சந்தியா மேனால் (ஐ.பி.எஸ்) முக்கியவுரை ஆற்றி மாணவிகளுக்கு பெண்கள் முன்னேற்றத்தையும் பெண்கள் அதிகாரத்தையும் கூறி மாணவிகளை ஊக்குவித்தார்.இவற்றில் கோயம்புத்தூர் பள்ளப்பட்டி பல்கலைக்கழக மைய மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.

பல்கலைக்கழகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். அத்தோடு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். பின்பு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில் நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.

Tags:    

Similar News