காங்கேயத்தில் அடிதடி தகராறில் கத்தியால் வெட்டிய செல்போன் கடைக்காரர்

காங்கேயத்தில் அடிதடி தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிய செல்போன் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருகின்றனர்.;

Update: 2024-05-23 11:28 GMT

காங்கேயத்தில் அடிதடி தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிய செல்போன் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலை பஞ்சாயத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் வயது 24. இவரது உறவினர் சஷ்வின் வயது 21. இவர்கள் இருவரும் கடந்த வாரம் 16ஆம் தேதி வியாழன்கிழமை இரவு 10 மணி அளவில் காங்கயம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் செல்போன் கடை நடத்திவந்த களிமேடு பகுதியை கார்த்தி வயது 35 என்பவர் தமிழ்செல்வன் மற்றும் சஷ்வின் ஆகிய இருவரையும் எதற்காக இங்கு நின்று பேசிக்கொண்டுள்ளீர்கள் என கேட்தாகவும், இதனால் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அப்போது வாக்குவாதம் முற்றிப்போக கார்த்தி கோபமடைந்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்செல்வன் மற்றும் சஷ்வினை தாக்கிவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதில் தமிழ்செல்வன் மற்றும் சஷ்வினுக்கு காது, கை மற்றும் முகத்தில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. இதனை அடுத்து இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த தமிழ்செல்வன் மற்றும் சஷ்வின் ஆகியோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து காங்கேயம் போலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News