சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு ஒரே நாளில் பெயர்ந்ததால் பரபரப்பு

சீர்காழி அருகே புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலை ஒரே நாளில் ஜல்லிகள் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2024-02-09 12:56 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாராஜபுரம் வடக்கு தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி கிராம மக்கள் செல்வதற்கு சாலை வசதி வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை அடுத்து மகாராஜபுரம் வடக்கு தெருவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேற்று புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

ஆனால், இன்று சிமெண்ட் சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை மிகவும் சேதமடைந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு சாலையின் தரனம் குறித்து ஆய்வு செய்து தங்களுக்கு தரமான சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News