குமரியை தொடரந்து புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசு - விஜய் வசந்த்

மக்களவை இடைத்தோதலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கன்னியாகுமரி மாவட்டத்தை மத்திய அரசு தொடா்ந்து புறக்கணிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இம்மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கும் என விஜய் வசந்த் எம்பி தெரிவித்தார்.

Update: 2024-03-29 01:19 GMT

விஜய் வசந்த் எம்பி 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான விஜய் வசந்த், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: -

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்காக பிரதமா் மோடி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி என யாா் வந்தாலும் மீனவா்களின் வாக்கு வங்கியை தங்களுக்கு சாதகமாக திருப்ப நினைக்கின்றனா். ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டுந்தான் மீனவ சமுதாயத்துக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அமைச்சராகப் பதவி வகித்த பொன்.ராதாகிருஷ்ணன் சாலை, பாலங்களைத் தவிர வேறு என்ன திட்டங்கள் கொண்டு வந்தாா் எனக் கூற முடியுமா? கடந்த மக்களவை இடைத்தோதலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கன்னியாகுமரி மாவட்டத்தை மத்திய அரசு தொடா்ந்து புறக்கணிக்கிறது.

மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் இம்மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கும். இங்கு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கன்னியாகுமரியை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன். அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலிருந்து முக்கிய பிரமுகா்கள் விரைவில் கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனா் என்றாா் அவா். தமிழக காங்கிரஸ் செயலா் ஸ்ரீனிவாசன், வட்டாரத் தலைவா்கள் முருகேசன், காலபெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News