திருப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விழா: கமிஷனர் பங்கேற்பு

திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கமிஷனர் கலந்து கொண்டார்.

Update: 2024-02-06 16:20 GMT

பரிசு வழங்கிய கமிஷனர்

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் எழிலி தலைமை தாங்கி பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) உஷா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:& படிப்பு மற்றும் விளையாட்டுகளில் வெற்றி இலக்கை அடைய கவனம் சிதறக்கூடாது. இலக்குகளுக்கு இடையூறாக தற்போது செல்போன்கள் மற்றும் டிவிக்கள் இருந்து வருகின்றன.

இருப்பினும் மாணவிகள் கவன சிதறல் இன்றி தங்களது இலக்குகளில் கவனத்தை செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் தங்களுக்குள் ஒவ்வொரு திறமையை வளர்க்க வேண்டும். அனைத்து துறைகளிலும் திறமையும், தகுதியும் உடையவர்கள் தான் அடுத்த நிலைக்கு செல்கிறார்கள். எந்த செயலாக இருந்து அதில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும்.

இதுபோல் உழைப்பும், முயற்சியும் இருக்க வேண்டும். போட்டித்தேர்வுகளில் பெண்கள் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார்கள். படிப்பை தாண்டி நிறைய விஷயங்களை மாணவிகள் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். இதற்கு பயப்பட கூடாது. துணிச்சல் வேண்டும். அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.  இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News