இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா

செஞ்சியில் 28 இருளர் குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-14 04:25 GMT

செஞ்சியில் 28 இருளர் குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்காப்பூர், ஜம்போதி, பாடி பள்ளம், கோணை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 28 இருளர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் தலா ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற் கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முல்லை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு 28 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் சத்துணவு மேலாளர் பழனி, திட்ட மேலாளர் சசிகலா, ஒன்றிய கவுன்சிலர் மணி, உள்பட பலர் கலந்து கொண் டனர்.
Tags:    

Similar News