நாகர்கோவில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
நாகர்கோவில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி சுசீலா (67)இவர் இன்று காலை திங்கள்சந்தையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டார். டெரிக் சந்திப்பு கடந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் நெரிசலை பயன்படுத்தி பஸ்ஸில் நின்ற பெண்கள் சுசீலா கழுத்தில் கடந்த மூன்று பவுன் நகையை பறித்தனர்.
இதை பக்கத்தில் இருந்து பெண் ஒருவர் பார்த்து சுசீலாவிடம் கூறினார். அப்போது பஸ் கண்கார்டியா பஸ் நிறுத்தத்தில் நின்றது. நகையை பறித்த பெண்கள் பஸ்ஸை விட்டு இறங்கி தப்பி ஓடினார்கள். சுசீலாவும் பஸ்சை விட்டு இறங்கி கூச்சலிட்டார். அப்போது அந்தப் பெண்கள் தனித்தனியாக சிதறி தப்பி ஓடினர். இதில் ஒருவர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் லிப்ட் கேட்டு தப்பி செல்ல முயன்றார். உஷாரான ஆட்டோ டிரைவர் வந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது மூதாட்டியிடம் நகை பறித்து விட்டு தப்பி சென்றது.
பொதுமக்கள் அந்த பெண்ணை பிடித்து நேசமணி நகர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த பெண்ணை மீட்டு நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த இசக்கியம்மாள் என்பது தெரிய வந்தது. தப்பியோடிய மற்ற பெண்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.