நாகர்கோவில்  போலீஸ் நிலையம் அருகே ஆசிரியையிடம் செயின் பறிப்பு......

நாகர்கோவில்  போலீஸ் நிலையம் அருகே ஆசிரியரிடம் நகை பறிப்பில் ஈடுப்பட்ட மர்மநபரை போலிசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-04-13 05:12 GMT

செயின் பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு  பகுதியை சேர்ந்த அகஸ்டின் மனைவி ஜெராபின் பிளவர் குபின் (55). இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று  பள்ளி முடிந்ததும் மாலையில் இவர் வீட்டிற்கு புறப்பட்டார்.இதற்காக அண்ணா பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர்ஆசிரியை  அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையை திடீரென பறித்தார்.

Advertisement

இதை கவனித்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.  ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். சம்பவம் அறிந்த கோட்டாறு போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் ரோந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

நகை பறிப்பு சம்பவம் நடந்த இடத்தின் அருகே கோட்டார் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் மாநகர பகுதியில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் மற்றும் போலீஸ் நிலையம் அருகில்  நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், சம்மந்தபட்ட துறையினர் மீது அதிருப்தியையும்  ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News