ஒரகடத்தில் 'டாஸ்மாக்' கடைக்கு வரும் வாகனங்களால் விபத்துக்கு வாய்ப்பு

ஒரகடத்தில் 'டாஸ்மாக்' கடைக்கு வரும் வாகனங்களால் விபத்து உண்டாகும் வாய்ப்புள்ளதால், கடையை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-04-11 03:55 GMT

ஒரகடத்தில் 'டாஸ்மாக்' கடைக்கு வரும் வாகனங்களால் விபத்து உண்டாகும் வாய்ப்புள்ளதால், கடையை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் - -வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் இடையேயான நெடுஞ்சாலையில் உள்ளது ஓரகடம். இப்பகுதியைச் சுற்றி, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணி செய்கின்றனர். பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள, ஓரகடம் சந்திப்பில், வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, மேம்பாலம் கீழே, ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில், ஒரகடம் பகுதியில் மூன்று அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. ஒரகடம் மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் தங்களின் வாகனங்களை, நெடுஞ்சாலை ஓரம் நிறுத்துகின்றனர்.

இதனால், சாலையின் அகலம் குறைவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் மோதி, விபத்துக்குளாகும் சூழல் உள்ளது. மேலும், மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர் நெடுஞ்சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதால், பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவியர் அசசத்துடன் சென்று வருகின்றனர், எனவே, மேம்பாலத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "

Tags:    

Similar News