சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவைகளில் மாற்றம்

சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-06-13 03:35 GMT

 சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

திருச்சி கோட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை-குளித்தலை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சேலம்-மயிலாடுதுறை ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) இன்றும் (வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். அதே நேரத்தில் கரூரிலிருந்து மயிலாடுதுறைக்கு இன்றும், நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும். வண்டி எண்-16812 என்ற ரெயில் நின்று செல்லும் அதே நிறுத்தங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News