மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் !

குருவிகுளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-22 06:16 GMT

தேரோட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் குருவிகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கலங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து முக்கிய வீதி வழியாக புறப்பட்டு சென்று மீண்டும் கோயில் சென்று அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News