வால்பாறை அருகே உள்ள சேக்கல் முடி தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்..
வால்பாறை அடுத்துள்ள சேக்கல் முடி முறுகாளி தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அறிவுறுத்தி வருகின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள சேக்கல் முடி முறுகாளி தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் என ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அறிவுறுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ஜூன் 20 பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதி முழுவதும் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவுகளை தேடி நகர் பகுதிக்குள் சுற்றி வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தற்போது சேக்கல் முடி முறுகாளி தேயிலை எஸ்டேட் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதை அவ்வழியில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தில் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் சிறுத்தை தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கி இருப்பதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தனியாக செல்ல வேண்டாம் எனவும் கூட்டமாக செல்ல வேண்டும் எனவும் பாதுகாப்பாக பணி செய்ய வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..