ஆண்கள் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

மாணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள்;

Update: 2024-02-18 17:57 GMT

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் கார்த்திகேயன்(18) பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில், பழஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.  இந்த நிலையில் மாணவரது நண்பர்கள் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து நீண்ட நேரமாக அறை கதவை தட்டியும் திறக்கவில்லை.

அதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உள்புறமாக பூட்டபட்டிருந்த தாழ்பாளை கம்பியை வைத்து திறந்து உள்ளே சென்று பார்த்து போது கார்த்திகேயன் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

ஆண்கள் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவன் தூக்கு போட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News