அமலாக்கத் துறையின் 34 மணல் குவாரி ,தொழிலதிபர்கள் வழக்குகள் ரத்து செய்த உயர்நீதிமன்றம்!!
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த 34 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
By : King 24x7 Desk
Update: 2024-07-17 07:21 GMT
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த 34 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில் அமலாக்கத் துறையின் வழக்கு செல்லாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி தேதி ஒரே நேரத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் பலரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் சென்னை எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.