சிதம்பரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாக எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்றதில், தமிழகத்தில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதிகளில் திமுக கூட்டணியில்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன், பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆண்கள் 7,53,643 பேரும் பெண்கள் 7, 66,118 பேரும் மூன்றாம் பாலினத்தினர் 86 பேரும் சேர்த்து மொத்தம் 15,19,847 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். இவர்கள் வாக்களிக்க 1709 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆண்கள் 5,56,930 பேரும், பெண்கள் 6,03,805 பேரும் மூன்றாம் பாலினத்தினர்கள் 27 பேரும் இன மொத்தம் 11,60,762 பேர் வாக்களித்தனர். சிதம்பரம் தொகுதியின் வாக்குப்பதிவு சதவீதம் 76.37 ஆகும். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளுக்கு என்று தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை என்னும் பணி 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குகள் எனப்பட உள்ளன. இதற்காக ஒரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதமும், விவிபேட் வாக்குகள் என்ன தனியே ஆறு மேஜைகளும் என்று மொத்தம் 90 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் தனியே எண்ணப்படுவதற்கும் மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர் இரண்டு உதவியாளர்கள் என 30 அலுவலர்கள் பணியமற்றப்பட்டுள்ளதோடு 10 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 10 நுண்பார்வையாளர்கள் என 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை வேட்பாளர்கள் முகவர்கள் பார்வையிடுவதற்காகவும் கண்காணிக்கவும் தனி தடுப்புகள் அமைத்திருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று வாரியாக முடிவுகள் எழுதி அறிவிக்க அறிவிப்பு பலகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசின் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவரும், இரண்டு உதவியாளர்கள் ஒரு மேஜிக்கு 4 பணியாளர்கள் வீதம் சேர்த்து மொத்தம் 336க்கும் மேற்பட்டோ ர் பணியில் ஈடுபட உள்ளனர். வருகிற நாலாம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
முதலில் தபால் வாக்குகளும் காலை எட்டு முப்பது மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் என்னப்படுகிறது. இதில் குன்னம் தொகுதியில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், அரியலூர் 22 சுற்றுக்களாகவும், ஜெயங்கொண்டம் மற்றும் புவனகிரி சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் தலா 21 சுற்றுகள் ஆகவும், சிதம்பரம் தொகுதி 19 சுற்றுகளாகவும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி 18 சுற்றுகளாவும் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது சட்டம் ஒழுங்கை கண்காணித்திட நாலு சிறப்பு நிர்வாக நடுவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 880 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்காக வேட்பாளர்களால் 995 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பணிபுரியும் அலுவலர்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கைப்பேசி எடுத்து வர அனுமதி இல்லை என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.